வாயு தொல்லைக்கு சிறந்த கஞ்சி.

by Staff / 19-04-2022 04:41:07pm
வாயு தொல்லைக்கு  சிறந்த  கஞ்சி.

வயிற்று வலி, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஞ்சியை வாரம் இருமுறை குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - அரை கப்
 பூண்டு - 75 கிராம்
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
காய்ச்சிய பால் - 1 கப்

செய்முறை

அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்த பின்னர் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்க வேண்டும்.

குக்கர் விசில் போனதும் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட்டு பால் கலந்து பரிமாறவும்.
[10:57 am, 19/04/2022] Renu: malai food
[10:59 am, 19/04/2022] Renu: கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை புதினா ஜூஸ்
   
கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
 கொத்தமல்லி - சிறிது,
புதினா - 1 கைப்பிடி,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு -  1 மேசைக்கரண்டி,
தண்ணீர் - 1/2 கப்,
எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி.

செய்முறை

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சிறிது தண்ணீர் .சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

 

Tags :

Share via