12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

by Staff / 23-10-2022 03:58:34pm
12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.அதன் பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ந்தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via