மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி

by Admin / 21-04-2022 10:12:58am
 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி

தி.மு.க.  ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களாக 13,500பேர் நியமிக்கப்பட்டனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2011 ஆம் ஆண்டு ெஜயலலிதா தலைமையிலமைந்த அரசு மக்கள் நலப்பணியாளர் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து வழக்குத்தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ,2014இல்,பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட உத்தரவிட்டது.இவ்வுத்தரவை ரத்து செய்ய வேண்டி அ.தி.மு.க அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.இவ்வழக்கு நடைபெற்று வரும் சூழலில்,தமிழக அரசு நேற்று ,மக்கள் நலப்பணியாளர்களுக்குமீண்டும்  பணி வழங்கப்படும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 12,524 மக்கள் நலப்பணியாளர்கள் கிராமத்து ப்பணியில் அமர்த்தப்படுவர்

பத்துஆண்டுகளில்இறந்துபோனவர்களின்வாரிசுகளுக்கும்  பணி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகஅப்பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது பணியமர்த்தப்படும்  மக்கள்பணியாளர்களுக்கு 7,500 ரூபாய்மாத சம்பளமாக வழங்கப்படும்.

 

Tags :

Share via