35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை: அமேசான்

by Editor / 02-09-2021 08:49:13pm
35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை: அமேசான்

அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் தீப்தி வர்மா தெரிவித்ததாவது:இந்தியாவில் அமேசான் வளர்ந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். இந்தியாவில் பெங்களூரு, சென்னை, கோவை, மும்பை, புனே உள்ளிட்ட 35 நகரங்களில் 8,000 இளைஞர்களுக்கு, இந்த ஆண்டு நேரடி வேலைவாய்ப்பு வழங்க உள்ளோம்.இந்த இளைஞர்களுக்குத் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். எந்திர அடிப்படையிலான அறிவியல் பிரிவுகளிலும் வேலைக்கு ஆட்களைச் சேர்க்க இருக்கிறோம். குறிப்பாக மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம்.2025க்குள் 20 லட்சம்வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

 

Tags :

Share via