காற்றழுத்த தாழ்வுப் பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்.

by Admin / 16-11-2021 07:00:23pm
காற்றழுத்த தாழ்வுப் பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள், வட தமிழக கடலோர பகுதியை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
 வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ,வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும்

 மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு - தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும்  வடக்கு தமிழ்நாடு கடலோர பகுதிக்கு அருகே நவம்பர் 18 ஆம் தேதி வந்தடையும் 

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் தென் கர்நாடக - வட கேரளா கடலோர பகுதிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் 

, தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்   நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வடதமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழையும், 19,20 ஆகிய தேதிகளில்ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via