மதுரையில் கொரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்

by Editor / 21-05-2021 12:22:03pm
மதுரையில் கொரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்

மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 5 மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். நேற்று கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்த முதல்வர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கினார். இதையடுத்து மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.உடன் திமுக எம்.பி. கனிமொழி, மதுரை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo