பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது மும்பையில் இன்று மாலை வழங்கப்படுகிறது

by Staff / 24-04-2022 01:19:11pm
பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது மும்பையில் இன்று மாலை வழங்கப்படுகிறது

மகாராஷ்டிர மாநிலம்  மும்பையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது இது குறித்து மோடி தனது டுவிட்டரில் லதா மங்கேஷ்கருடன்  தொடர்புடைய இந்த கௌரவ விருதுக்கு தாம்  நன்றியுடனும் பணிவுடனும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளமான இந்தியாவை காண கனவு கண்டவர் என்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உரிய பங்கு அளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 92வது வயதில் உயிரிழந்தார்.

 

Tags :

Share via