முதல்வருடன் விவேக் மனைவி சந்திப்பு

by Editor / 25-04-2022 03:53:42pm
முதல்வருடன் விவேக் மனைவி சந்திப்பு

மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நடிகர் விவேக்   வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார். ., நடிகர் விவேக் தன் படத்தில் சமூக சீர்திருத்த கருத்துகளை வசனங்களில் பிரதிபலிக்க செய்ததால்சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.மறைந்த முன்னால் குடியரசு தலைவர் பெயரில் மரம்நடும் அமைப்பையும் நடத்தி வந்தார். அவர் இறந்து ஒராண்டு நிறைவுறும் தருவாயில் அவரது மனைவி,மகள்,உதவியாளர் முருகன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இக்கோரிக்கை வைத்தனர்.

 

Tags :

Share via