ஒரே நாளில் 51 பேர் பலி: ஷாங்காய் மக்கள் அச்சம்

by Editor / 26-04-2022 10:06:19am
 ஒரே நாளில் 51 பேர் பலி: ஷாங்காய் மக்கள் அச்சம்

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் ஷாங்காயில் ஒரே நாளில், 51 பேர் உயிரிழந்துள்ளது, அந்நகர மக்களை பீதியடைய வைத்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மட்டும் 20 ஆயிரத்து, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்; 138 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக ஷாங்காய் நகரில், 2,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 51 பேர் பலியாகி உள்ளனர்.

ஷாங்காயில், ஒரே நாளில் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பது, இதுவே முதன்முறையாகும். மொத்தம், 2.6 கோடி மக்கள் தொகை உள்ள ஷாங்காயில், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் பீஜிங்கில் வைரசால் ஏற்படும் பாதிப்புகளில், பெரும்பாலானவை, அங்குள்ள சாவோயாங் மாவட்டத்தில் பதிவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், 35 லட்சம் மக்கள் வசிக்கும் சாவோயாங்கில், மூன்று நாள் பரிசோதனை முகாம் துவங்கப்பட்டுள்ளது.

 

Tags : 51 killed in one day: Shanghai people fear

Share via