சுங்கச்சாவடி அருகே சாலையில் நிறுத்தப்பட்ட மினி லாரி கடத்தல்.

by Editor / 15-05-2022 09:06:13am
  சுங்கச்சாவடி அருகே சாலையில் நிறுத்தப்பட்ட மினி லாரி கடத்தல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே நேற்றிரவு டீ சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்திய சமயத்தில் ஓட்டுனருக்கு தெரியாமல் (தோஸ்த்)மினி லாரி கடத்தல்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு வாகன உதிரி பாகங்கள் ஏற்றிச்சென்ற (தோஸ்த்) மினி லாரி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடியை கடந்து சாலையோரமாக இருந்த பேக்கரியில் தேனீர் சாப்பிடுவதற்காக அதன் ஓட்டுநர் நிறுத்திய சமயத்தில் ஓட்டுனருக்கு தெரியாமல் மர்மநபர் அந்த வாகனத்தை கடத்தி சென்றதாக கூறப்ப்டுகிறது.இதன் தொடர்ச்சியாக வாகனத்தின் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Mini truck hijacked parked on the road near the toll booth.

Share via