காங்கிரஸ் கட்சியில் புதிய சீர்திருத்தங்களை குறித்து சோனியா காந்தி அறிவிப்பு

by Staff / 16-05-2022 02:24:59pm
காங்கிரஸ் கட்சியில் புதிய சீர்திருத்தங்களை குறித்து சோனியா காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நேற்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உதயுபுரில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் காங்கிரஸ் சீரமைக்க அமைக்கப்பட்ட ஆறு குழுக்கள் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளன  .இது  குறித்து பேசிய சோனியா காந்தி அடுத்த சில நாட்களில் 2024 மக்களவை தேர்தலை இலக்காக வைத்து சிறப்பு குழுவை நியமிக்க இருப்பதாக தெரிவித்தார். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி 5 ஆண்டுகளுக்கு மேல் யாரும் பதவியில் நீடிக்கக் கூடாது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரசுக்கு ஒரு புதிய உதயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் பாரத விழிப்புணர்வு பாதயாத்திரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் என்றும் சோனியா காந்தி அறிவித்தார்.

 

Tags :

Share via