மதுரையில் கோடை மழை., வெப்பம் தணிந்து குளிர்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி.

by Editor / 16-05-2022 07:34:47pm
மதுரையில் கோடை மழை., வெப்பம் தணிந்து குளிர்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிய நிலையில் பல்வேறு இடங்களில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் நீண்ட நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பொழிகிறது. மதுரை மைய பகுதிகளான கோரிப்பாளையம்., மஹால்., சிம்மக்கல்., பெரியார் பேருந்து நிலையம்., கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும்., மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம்., நாகமலை புதுக்கோட்டை., திருமங்கலம்., விரகனூர்., விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிகிறது.

 

Tags : Summer rains in Madurai.

Share via