விஜய்க்கு வீணையே பரிசாக கொடுத்த முதல்வர்

by Editor / 19-05-2022 12:52:41pm
விஜய்க்கு வீணையே பரிசாக கொடுத்த முதல்வர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஜய்க்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் வெள்ளி வீணை ஒன்று பரிசளித்தார். நடிகர் விஜய்யின் 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இனி நடிகர் விஜய் புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார். தெலுங்கானா மாநில முதல்வருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் பதிலுக்கு சந்திரசேகர்ராவ் நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்திதோடு  நினைவு பரிசாக வெள்ளி வீணை ஒன்றை பரிசளித்து வழங்கி கவுரவித்தார். தெலுங்கானா முதல்வரை சந்திக்க சென்ற நடிகர் விஜய்க்கு அங்கிருந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே திருமண நிகழ்வு ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து விஜய் கைகுலுக்கினார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயுடன் வீட்டிற்கே வந்து சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via