குடும்ப வன்முறை பற்றி அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ(எம்) வலியுறுத்தல்

by Editor / 20-05-2022 11:07:42pm
குடும்ப வன்முறை பற்றி அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ(எம்) வலியுறுத்தல்

தமிழ்நாட்டி, திருமணமான இளம் பெண்களில் ஐந்தில் இருவர் குடும்ப வன்முறையை எதிர்கொள்வதாக,  சென்னையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே, குடும்ப வன்முறைகள் மிக மோசமாக இருந்தை குடும்ப நல ஆய்வு விபரங்கள் காட்டியிருந்தன. இப்போது சவீதா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்துறை மேற்கொண்டிருக்கும் ஆய்வில், இளம் குடும்பங்களில் நிலவும் கடுமையான சூழல் பற்றிய கூடுதல் விபரங்கள் வந்துள்ளன.
அதன்படி, வன்முறைக்கு ஆளாகும் குடும்பங்களின் சதவீதம் 38.7 ஆகும். அவர்களில் உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொள்வோர் 28.7%, பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1%, உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6% ஆகும்.
இந்த விபரங்கள் அனைத்துமே 30 வயதை எட்டாத இளம் பெண்கள் தெரிவித்தவை.

 திருமணத்திற்கு பின் ஒருமுறையாவது உடல் ரீதியிலான தாக்குதலை எதிர்கொண்இருப்பதாக 28.7 சதவீதம் பேர் தெரிவித்திருக்கிறார். நண்பர்களை சந்திக்க முடியாத நிலைமை இருப்பதாக 10.6 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். சுய மரியாதைக் குறைவாக நத்தப்படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சையை நாட நேர்ந்திருப்பது பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
 
குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பது இந்த ஆய்விலும் தெரிய வந்துள்ளது. படித்த பெண்கள் மத்தியிலும், பொருளாதார ரீதியாக சுயமாக முடிவு மேற்கொள்வோரும் வன்முறைகு ஆளாவது குறைவாக இருக்கிறது. 

தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என சில நாட்கள் முன் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தோம். அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அதில் பட்டியலிட்டிருந்தோம். அதனை மீண்டும் வற்புருத்திட விரும்புகிறோம்.

குடும்ப வன்முறைக்கு எதிரான தீவிர பிரச்சாரம் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, குடும்ப வன்முறைக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

- கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

 

Tags : Shocking Studies on Domestic Violence The CPI (M) urged the government to take serious action

Share via