ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் பலி

by Staff / 24-05-2022 02:03:08pm
ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர் மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.அப்படனில் உள்ள பத்து அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுவதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via