பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

by Editor / 26-05-2022 08:58:27am
பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை ரூபாய் 500 கோடி மதிப்பு.

தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை ரூபாய் 590 கோடி மதிப்பு.

850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு,  மற்றும் 271 கிலோமீட்டர் திருவள்ளூர்- பெங்களூரு  குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பு.

பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், சென்னை  கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை அர்பணிக்கிறார்.

சென்னை - பெங்களூரு  262 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை ரூபாய் 14870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் சென்னை பெங்களூரு பயண நேரம் 2-3 மணி நேரம் குறையும்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் 5850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும்.

தர்மபுரி-நெரலூரு  தேசிய நெடுஞ்சாலையில் 3870 கோடி ரூபாய் செல்வதில் 94 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை மற்றும் மீன்சுருட்டி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர் 720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் அருகாமை கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும்.

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை 1800 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும்  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமரின் 'விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின்  கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
 

Tags : The Prime Minister is laying the foundation stone for 11 projects worth Rs 31,500 crore.

Share via