உக்ரேன் போரால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் பாதிப்பு

by Staff / 31-05-2022 02:11:14pm
உக்ரேன் போரால்  ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் பாதிப்பு

உக்ரேனில் நடைபெற்றுவரும் போரால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சிகிச்சை உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கிவந்த நன்கொடையை பல்வேறு தரப்பினரும் தற்போது உக்ரேனில் இருந்து வெளியேறிய 6 பில்லியன் அகதிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே உக்ரைன் போர் மற்றும் தொற்று நோய்கள் காரணமாக அடுத்த 6 மாதங்களில் உணவுகளின் விலை 16% உயர்வது உடன் 6 லட்சம் குழந்தைகள் சிகிச்சை இழக்க நேரிடும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via