தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Editor / 03-06-2022 09:10:38am
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகப் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், ஜூன் 3, 4-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45-55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Chance of heavy rain in one or two places in 14 districts of Tamil Nadu

Share via