உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 குரங்கு அம்மை நோய் பாதிப்பு

by Staff / 06-06-2022 02:21:27pm
உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 குரங்கு அம்மை நோய் பாதிப்பு

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாகவும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் கூடிய இந்நோய் இங்கிலாந்து ஸ்பெயின் போர்ச்சுகல் கனடா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி வருகிறது.

 

Tags :

Share via