விக்ரம்..விக்ரம்..3 நாளில் 150கோடி சாதனையை படைத்த கமல்

by Editor / 06-06-2022 09:57:10pm
விக்ரம்..விக்ரம்..3 நாளில் 150கோடி  சாதனையை படைத்த கமல்

விக்ரம் படம் வெளியாகிய 3 நாட்களில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ.1.70 கோடி வசூல் செய்தது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.40 கோடியும், உலக அளவில் ரூ. 55 கோடியும் வசூல் செய்தது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் சேர்த்து ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Vikram..Vikram..Kamal who created a record of 150 crores in 3 days

Share via