மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர்கள் கடலில் விழுந்து தற்கொலை

by Editor / 06-06-2022 11:01:33pm
மகன் இறந்த  துக்கம் தாங்காமல் பெற்றோர்கள் கடலில் விழுந்து தற்கொலை


பொள்ளாச்சி அருகே சமத்தூர் எஸ். பொன்னாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள்  கோவிந்தராஜ் (62), தனலட்சுமி (59) தம்பதி.  கோவிந்தராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர்களுக்கு கனீஸ் பிரபாகரன் என்ற மகன் ஒருவரும் உண்டு.இவர் ஐ. டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி  கனீஸ் பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பாசமாக வளர்த்த  மகனும் இறந்துவிட்டதால்  கோவிந்தராஜும் அவரது மனைவியும் பெரும் சோகத்திலும், மனவேதனையிம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் கடலில் இரு உடல்கள் மீட்பதை கண்ட பக்தர்கள், இதுகுறித்து உடனடியாக ராமேஸ்வரம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர காவல்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கடலில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்க முயன்ற போது, இருவரது உடல்களும் துணியால் சேர்த்து கட்டப்பட்டது தெரியவந்தது. இதில்,  கோவிந்தராஜ் சட்டைப்பையில் அவரது ஆதார் நகல் இருந்ததால் அவர்கள் யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு தகாவால் கிடைத்தன.

 முதியவர்கள் இருவரும் தற்கொலையா செய்வதற்கு முன்னர் தங்களது உறவினர்களுக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு, தாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு குறித்து தெரிவித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

கோவை மாவட்டம் கோட்டூரிலுள்ள அவரது வீட்டில்  தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தங்களது ஒரே மகன் இறந்ததால் தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தங்களின் சொத்துக்களை தனிப்பட்ட முறையில் யாருக்கும் வழங்கவில்லை. எனவும், நாலுபேருக்கு நல்லது செய்வதற்காக மகன் கனீஸ் பிரபாகரன்   பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதில், கோவையை சேர்ந்த 4 பேர்களை நியமித்து உள்ளதாகவும்,அவர்கள் அந்த அறக்கட்டளையை முன்னின்று நடத்துவார்கள் என அந்த கடிதத்தில் குறிபிட்டு உள்ளது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Unable to mourn the death of their son, the parents fell into the sea and committed suicide

Share via