எதிர்காலத்தில் அக்னிவீரர்கள் ஆள்சேர்ப்பு 1.25 லட்சமாக உயரும்- லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி

by Editor / 19-06-2022 04:34:33pm
எதிர்காலத்தில் அக்னிவீரர்கள் ஆள்சேர்ப்பு 1.25 லட்சமாக உயரும்- லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி

அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தீவைப்பு, வன்முறை, போராட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்தது இல்லை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும்,100% காவல்துறை வெரிபிகேஷன் உண்டு, அது இல்லாமல் ஒருவரும் சேர முடியாதுஅக்னிபத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது.முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது தற்போது திட்ட ஆய்வுக்காக 46 ஆயிரம் வீரர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அடுத்த 5 முதல் 5 ஆண்டுகள் ஆள்சேர்ப்பை 50000 முதல் 1 லட்சம் வரை அதிகரிக்கப்படும்ஒவ்வொரு ஆண்டும் முப்படைகளில் இருந்து சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர்.ஓய்வு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என இதுவரை யாரும் யாரிடமும் கேட்க முயன்றது இல்லை -  முப்படைகளுக்கான இந்த சீர்த்திருத்தம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
ராணுவத்தில் அனுபவத்துடன், இளைஞர்களை இணைத்து இளமையாக வைக்க விரும்புகிறோம். 
இதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. அக்னி வீரர்கள் போரில் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறியுள்ளார்.

 

Tags : The number of firefighters will increase to 1.25 lakh in the future - Lieutenant General Anil Puri

Share via