உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 2022 - 2023 கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் , அகழாய்வுக்கான பட்டய வகுப்பு

by Editor / 22-12-2021 12:20:48am
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 2022 - 2023 கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் , அகழாய்வுக்கான பட்டய வகுப்பு

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் , அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2022 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறு தோறும் ஓராண்டு காலம் நடைபெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்பிற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. சேர்க்கை கட்டணம் ரூ.3000 / - ஆகும். சேர்க்கை கட்டணம் இயக்குநர் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெயரில் வங்கி வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021 திசம்பர் 21ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைத்தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

விண்ணப்பம் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2021. அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குனர் , உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை , மைய தொழில் நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113

 

Tags :

Share via