ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை

by Staff / 07-03-2024 12:18:56pm
ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை

 

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் வசித்து வருபவர் 17 வயது சுருதி. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனது தம்பியுடன் மாணவி ஸ்ருதி வீட்டில் படுத்துக் கொண்டிருந்தார். மாலையில் வீடு வந்த தாய் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததை பார்த்து கதவை திறந்த பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பொது தேர்வு வருவதால் செல்போனில் ரீலிஸ் பார்க்காமல் படிக்கவும் என தாய் கூறியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories

Logo