மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கதொடர்புடைய ஆறு பேரைகிழக்கு காவல் நிலைய சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

by Admin / 02-10-2026 01:41:14am
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கதொடர்புடைய ஆறு பேரைகிழக்கு காவல் நிலைய சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சர்வதேச இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிர் (கிலாபத் இயக்கம்) என்ற அமைப்புடன் தொடர்புடைய ஆறு பேரை தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரில் உள்ள இளைஞர்களை மனமாற்றம் செய்து இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கும் நோக்கில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்களது வீடுகளில் சிறப்பு புலனாய்வு பிரிவின நடத்திய சோதனையில் செல்போன்கள் லேப்டாப்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு சார்ந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேன், அப்துல் வர்கீஸ், உமர் முக்தர் ,யாசர் அப்துல், சம்சுதீன், ஷேக் பரீத் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo