ஓப்பன் ஏஐ நிறுவனம் தனது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஓப்பன் ஏஐ நிறுவனம் தனது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ரகசியத் தகவல்களைத் தவறாகக் கையாண்டு, வெளிப்புற ஏஐ பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவுடன் பகிர்ந்துகொண்டதற்காக , ஜாஸ்மின் வாங், டோமெக் கோர்பக் மற்றும் மிகிதா பலேஸ்னி ஆகிய மூன்று முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறி, அத்தியாவசியமான மற்றும் ரகசியத் தகவல்களை வெளிப்புறத் தரப்பினருடன் பகிர்ந்து கொண்டதை ஓப்பன் ஏஐ தங்களது விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜெண்டுகள் சில கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டது தொடர்பான பாதுகாப்புப் புகார்களும் நிறுவனத்தின் புதிய மாடல்கள் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதங்களும் அண்மைக் காலங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் ,இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :


















