தமிழ்நாட்டில் ,15 மாவட்டங்களில் மிதமானது முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
இன்று தமிழ்நாட்டில் ,15 மாவட்டங்களில் மிதமானது முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 17,18 ஆகிய தேதிகளிலும் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலைஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags :

















