பிரஞ்சில் பள்ளி மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது
பிரஞ்சில் பள்ளி மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்து நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது அதிக மாணவர்கள் சேர்க்கை,ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு மற்றும் நிதி நெருக்கடி ஆகிய காரணங்களை முன் வைத்து மாணவர்கள் கடந்த வாரம் பாரிஸில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.
வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகள், வாகனங்கள் மற்றும் மின்சார பைக்குகளுக்கு தீ வைத்துள்ளனர். நாண்டஸ் மற்றும் லெ ஹாவ்ரே போன்ற சில நகரங்களில் பள்ளி வளாகங்களின் நுழைவாயில்கள் மற்றும் முகப்புப் பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையால் நாடு முழுவதும் காவல்துறையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதில் மாணவர்களும் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களும் 65 பள்ளி ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க பிரெஞ்சு பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதோடு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது அதிக மாணவர்கள் சேர்க்கை,ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு மற்றும் நிதி நெருக்கடி ஆகிய காரணங்களை முன் வைத்து மாணவர்கள் கடந்த வாரம் பாரிஸில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

Tags :