சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய்

by Admin / 08-10-2026 11:31:09pm
 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய்

தமிழக அரசு வேளாண்மை துறை  சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 603.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு கரும்பு டன்னுக்கு நிர்ணயித்து உள்ள விலை 3290. 50 பைசாவுடன் தமிழக அரசு ஊக்கத்தொகையாக 709. 50 பைசா அதிகமாக வழங்கி 4000 ரூபாயாக வழங்க உள்ளது. 2025 26 ஆம் ஆண்டு 29 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 90 ஆயிரம் கரும்பு விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைவார்கள். இதற்காக விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் அரசு நேரடியாக பணம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo