பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் விஜய் இருவரும் வடபழனி பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

by Admin / 11-10-2026 06:22:19pm
 பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் விஜய் இருவரும் வடபழனி பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். பின்னர் இருவரும் வடபழனி பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தனர். மெட்ரோ பணிகள் குறித்து பிரதமர் அங்குள்ள அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்த பின்னர் மெட்ரோவில் பயணிக்கும் பயணச்சீட்டை தம் மொபைலில் இருந்து பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்று மெட்ரோ ரயில் பணித்தார் அவருடன் தமிழக முதலமைச்சரும் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் பொழுது இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பயணம் ஆகிறது. இப்பொழுது 14.6 கிலோமீட்டர் தூரம் வரை பணி நிறைவுற்ற நிலையில் இன்று மாலையில் இருந்து பொதுமக்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்னும் பல பகுதிகளில் மெட்ரோ படி நிறைவுறாத நிலையில் உள்ளதால் அதை விரைந்து முடித்த பின்பு முழுமையான பூந்தமல்லி வடபழனி மெட்ரோ பயணம் தொடரும். குறைந்தபட்ச கட்டணமாக பத்து ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாய் நிர்விக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் நடைபெறும் நிகழ்வில் 13,000 கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்  பல்வேறு நிறைவற்ற பணிகளை தொடங்கி வைத்தும் சிறப்புரை ஆற்ற உள்ளார். இவ்வளவு தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் விஜய் பிரதமரை வரவேற்று பேசுவார்.

 

 பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் விஜய் இருவரும் வடபழனி பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
 

Tags :

Share via
Logo