கமுதி அருகே 200 ஆண்டு பழமையான ஐம்பொன் சந்தான கிருஷ்ணன் சிலை கண்டெடுப்பு

by Editor / 09-07-2022 01:22:54pm
கமுதி அருகே 200 ஆண்டு பழமையான ஐம்பொன்  சந்தான கிருஷ்ணன்  சிலை கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையின் போது ஒரு கிலோ 240 கிராம் எடையுள்ள சந்தான கிருஷ்ணர் ஐம்பொன் கண்டெடுக்கப்பட்டது

மரக்குளம் கிராமத்தில் வில்லால் உடைய அய்யனார் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்
அப்போது 1 கிலோ 240 கிராம் எடையுள்ள 200 ஆண்டுகள் பழமையான  ஐம்பொன் சிலை யான தவழும் பிள்ளை  சந்தான கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது 

இதையடுத்து நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள்  கிராம விஏஒ பாண்டியிடம் தகவல் தெரிவித்தனர்

கமுதி தாசில்தார் சிக்கந்தர் பபிதாவிடம் விஏஓ சிலையே ஒப்படைத்தார் 
தொல்பொருள் துறை ஆய்வுக்கு பின் சிலையின் வருடம் விவரம் குறித்து தெரியவரும் என்று தாசில்தார் சிக்கந்தர் பபிதா கூறினர்

முன்னோர்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பாக்கியம் வரம் வேண்டி   சந்தான கிருஷ்ணர் சிலை நம் முன்னோர்கள் அப்பகுதியில் வழிபட்டதாக தொல்லியல் ஆர்வலர் ராஜகுரு தெரிவித்தார்

 

Tags :

Share via