முன்னாள் முதல்வர் மீது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Editor / 26-07-2022 10:46:47am
 முன்னாள் முதல்வர் மீது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்திற்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.இதனைத்தொடர்ந்து  4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படாமல்இருந்துவந்த நிலையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டதை அடுத்து, இதனை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via