டெண்டர் முறைகேடு வழக்கு- ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Editor / 26-07-2022 03:48:47pm
டெண்டர் முறைகேடு வழக்கு- ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஈபிஎஸ்இன் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. அதன்பின்னர் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

Tags : Tender malpractice case- Adjournment to 2nd August

Share via