பாம்பு - வீட்டில் வளர்க்க நினைத்தவருக்கு அதிர்ச்சி!

by Editor / 06-06-2021 10:28:04am
பாம்பு - வீட்டில் வளர்க்க நினைத்தவருக்கு அதிர்ச்சி!

சீனாவில் வீட்டில் வளர்க்க நினைத்து பாம்பினை ஆர்டர் செய்த ஒருவருக்கு, விஷத்தன்மை நீக்கப்படாத பாம்பு மாற்றி அனுப்பப்பட்டது தெரியவந்தது.

சீனாவில் வசித்து வரும் ஒருவர் தன் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க பாம்பு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். சீனாவில் பாம்புகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதியுள்ளது. இப்படியாக பாம்பை ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வந்தது. பொதுவாக பாம்புகளை செல்லப்பிராணிகளாக வாங்குபவர்கள் அதில் உள்ள விஷத் தன்மையை எடுத்துவிட்டு பின்னரே வாங்குவர். அதன்படி இந்த பாம்பை விற்ற நிறுவனமும் முறைப்படி விஷத்தன்மை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

பாம்பு வந்த பின்பு ஒரு நாள் பாம்புடன் அவர் படுக்கையில் படுத்திருந்த போது எதிர்பாராத விதமாக பாம்பு அவரின் தொடை பகுதியை கடித்து விட்டது. அப்பொழுது அவர் அந்த பாம்பிடம் விஷம் இருந்ததை கண்டுபிடித்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று உயிர் தப்பினார்.

அதன் பின் நடந்த விசாரணையில் பாம்பை விற்ற நிறுவனம் செய்த கவனக்குறைவால் விஷம் நீக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக, விஷத்தன்மை நீக்கப்படாத பாம்பு மாற்றி அனுப்பப்பட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via