ரயில் விபத்து நடந்த தடத்தில் சீரமைப்புபணிகள் தீவீரம்.

by Editor / 04-06-2023 07:35:08am
ரயில் விபத்து நடந்த தடத்தில் சீரமைப்புபணிகள் தீவீரம்.

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து உலகில் பல்வேறு நாடுகளிலும்  முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மீட்பு பணியில் 7 பொக்லைன், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளங்கள் சிறுமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டுவருகின்றனர்.மேலும் சிலிப்பர்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் பொருத்தும் பணிகளும் வேகமாக நடந்துவருகின்றன.மேலும், விரைவில் வழக்கமாக ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரயில் விபத்து நடந்த தடத்தில் சீரமைப்புபணிகள் தீவீரம்.
 

Tags :

Share via