சபரிமலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

by Editor / 17-08-2022 01:53:47pm
சபரிமலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஆவணி 1ம் தேதியான இன்று சபரிமலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளுக்காக கோவில் நேற்று, திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) அதிகாரிகள் கூறுகையில், புனித நாளில் தெய்வத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அதிகாலையில் இருந்து கோயிலில் குவிந்தனர்.தந்திரி (தலைமை அர்ச்சகர்) கண்டாரி ராஜீவரரு தலைமையில் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்கள் கருவறையின் வாசல்களைத் திறந்து தீபம் ஏற்றியவுடன், கோயில் வளாகமான சன்னிதானம் ஐயப்ப முழக்கங்களால் அதிர்ந்தது.

வழக்கமான பூஜைகள் தவிர, சிறப்பு சடங்கான "லட்சார்ச்சனை" சன்னதியில் நடைபெற்றது. டிடிபி தலைவர் கே.அனந்தகோபன், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ் மற்றும் பிற குழு உறுப்பினர்கள் அதிகாலையில் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவில் திறந்திருக்கும். "உதயஸ்தமய பூஜை", "அஷ்டபிஷேகம்", "களபாபிஷேகம்", "படிபூஜை" போன்ற சடங்குகள் இந்த நாட்களில் நடைபெறும். விர்ச்சுவல் வரிசை முறையில் பதிவு செய்த பின் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லலாம், என்றனர்.

நிலக்கல், அடிவார முகாமில், பக்தர்களுக்காக ஸ்பாட் பதிவு முறையும் நடைமுறையில் உள்ளது.
மேலும், ஐயப்பன் கோவில் ஓணம் பண்டிகைக்காக வரும், செப்டம்பர் 6 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி மூடப்படும் என்றும் டிடிபி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags :

Share via