உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 775 மில்லியன் டாலர் நிதி உதவி

by Editor / 20-08-2022 01:40:25pm
உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 775 மில்லியன் டாலர் நிதி உதவி

 ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் கடந்த ஆறு மாதங்களாக உக்ரைன் சமாளித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு 775 மில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் கண்ணிவெடி எதிர்ப்புகள் வாகனங்கள் பீரங்கிகள் போன்றவை முதன்முறையாக உக்ரேனுக்கு  வழங்கப்பட உள்ளன கிழக்கு பகுதிகளில் ரஷ்ய ராணுவம் கண்ணிவெடி வைத்து இருப்பதாக கூறப்படுவதால் அங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள இந்த ஆயுதங்கள் உக்ரேனுக்கு  உதவியாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

 

Tags :

Share via