நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முதல்வர்!

by Editor / 08-06-2021 12:25:24pm
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கைகளின்றி நோயாளிகள் ஆம்புலன்சிஸிலேயே காத்துக்கிடந்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவரையில் மக்கள் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசு, வேறு வழியில்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போதும் பாதிப்பு கட்டுக்குள் வராததால் கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய முழு ஊரடங்கு அமலானது.

இந்த முழு ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டுப்புற கலைஞர்கள், திரைப்பட தொழிலாளர்கள் என பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்து வருகிறது. இந்த நிலையில் நலிந்த இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். கலை, பண்பாட்டுத் துறை சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது

 

Tags :

Share via