ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

by Newsdesk / 21-08-2022 11:39:38pm
ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு  மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைனை பொருத்த வரை அடுத்த 48 மணி றேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டியகடல் பகுதியில் குறைந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது தெற்கு அந்தமான் கடல்பகுதி நகரக்கூடும. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகவும்
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இது மேற்கு  வடமேற்கு திசையில் நகர்ந்து  3ஆம்தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று,4ஆம் தேதி வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும்.


தற்போது மத்திய கிழக்கு அதனை ஒட்டிய மகாராஷ்டிரா-கோவா கடற்பகுதியில் நிலவும் லளி மண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக இன்று தென்கிழக்கு அரபிக்கடல்,கேரளகடலோரப்பகுதிகள் மற்றும்லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45கிலோமீட்டர் வீசக்கூடும் எனவானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது  இன்று அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அநதமான் தீவுப்பகுதிகள்,நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,மத்தியகிழக்கு வங்க கடல் பகுதிகள்,3 ஆம் தேதி
மத்திய மேற்கு-வட மேற்கு வட மேற்கு வங்க பகுதிகளில் சூறாவளிக் காற்று4 5-65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே75கி.மீ வேகத்திலும் வீசலாம். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச்செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

 

Tags :

Share via