நடிகை நக்மாவுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

by Editor / 25-08-2022 02:25:59pm
நடிகை நக்மாவுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அரசு சேவை வழங்கும் ஈ.சி.எச். டிஜிட்டல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நக்மாவுக்கு கோல்டன் விசாவை அதிகாரிகள் வழங்கினர்.

 

Tags :

Share via