வேண்டுமென்றே வீண் ஆடம்பரமாக செய்து 2 பேர் உயிர்நீத்திருக்கிறார்கள்- அமைச்சர் பொன்முடி

by Editor / 01-09-2022 10:19:24pm
வேண்டுமென்றே வீண் ஆடம்பரமாக செய்து 2 பேர் உயிர்நீத்திருக்கிறார்கள்- அமைச்சர் பொன்முடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை விட்டவர் அண்ணாதான் என அண்ணாமலையே கூறியிருக்கிறார். அண்ணா விடுமுறை விடுகிறார் என்றால், அவருக்கு இந்து மதத்தின் மீது கோபம் இருந்திருந்தால் விடுமுறை விட்டிருப்பாரா? எங்களைப் பொருத்தவரை சமூக நீதிதான் முக்கியம். அனைத்து சமுதாயமும், அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த கடவுளுக்கும் எதிராக நாங்கள் செயல்படுவதில்லை.

சதுர்த்தி கொண்டாடவில்லை என்றால்...? நேற்று என்ன நடந்தது பார்த்தீர்களா? வேண்டுமென்றே வீண் ஆடம்பரமாக செய்து 2 பேர் உயிர்நீத்திருக்கிறார்கள். அந்த மாதிரி நிகழ்வுகளையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் நோக்கமே தவிர இதை நிறுத்த வேண்டும் என்பது கிடையாது. இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை. அதனால், இதற்கு போய் வாழ்த்து சொல்லவேண்டும் என்பதெல்லாம்... அவர்களின் எதிர்பார்ப்பு என்பது வேற... அவர்கள் எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தார்கள். மதவெறியை தூண்டி விடுவதே அவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via