பிரதமர் மோடியால் அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் சிறப்பம்சம்.

by Editor / 02-09-2022 04:17:24pm
பிரதமர் மோடியால் அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் சிறப்பம்சம்.

மிக்29கே' ரக போர் விமானங்கள் மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியது. 2,200 பிரிவுகளுடன், 1,600 வீரர்கள் பயணிக்க கூடிய இந்த கப்பல், பெண் வீராங்கனையருக்கான பிரத்யேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், உயர்தர மருத்துவமனையில் இருக்கக் கூடிய அத்தனை வசதிகளும் இடம்பெற்று உள்ளன. சமீபத்திய நவீன மருத்துவ உபகரணங்கள், 'பிசியோதெரபி' பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடங்கள் ஆகியவை உள்ளன.
இந்த கப்பலில், 'மிக்29கே' ரக போர் விமானங்கள், 'கமோவ் 31, எம்.எச்.,60ஆர்' ரக ஹெலிகாப்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக விமானங்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் வசதி உள்ளது. இந்த கப்பலில் மிக குறுகிய துாரத்தில் விமானம் மேல் எழுப்பி செல்லும் நவீன, 'ஸ்டோபார்' தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த கப்பலை உருவாக்கியதன் வாயிலாக, உள்நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான திறனை உடைய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது. கொச்சி கடற்படை தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 

 

Tags :

Share via

More stories

Logo