நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நீர் வீழ்ச்சி- பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் திடீர் ஆய்வு

by Editor / 07-09-2022 09:07:02am
நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நீர் வீழ்ச்சி-  பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் திடீர் ஆய்வு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மேக்கரை கிராமத்தில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நீர் வீழ்ச்சிகளை விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணியானது கடந்த மாதம் தொடங்கியது. பல நீர்வீழ்ச்சிகளை அகற்றப்பட்டுள்ள சூழலில், இன்று மேக்கரை பகுதியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் நாகராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பல்வேறு துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்த சூழலில், இடிக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளை புகைப்படம் எடுத்தனர்.தொடர்ந்து, இடிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அருகாமையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, மேக்கரை பகுதியில் இடிக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகள் குறித்தும், நீர்வீழ்ச்சிகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கையை முறையாக தயார் செய்து அரசுக்கு சமர்ப்பணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நீர் வீழ்ச்சி-  பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் திடீர் ஆய்வு
 

Tags :

Share via