சித்தர்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பதினாங்கு வேகங்கள் 

by Editor / 19-09-2022 09:00:56pm
சித்தர்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பதினாங்கு வேகங்கள் 

சித்தர்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பதினாங்கு வேகங்கள் 

"பதினாங்கு வேகப் பேர்கள் பகர்ந்திட அவற்றை கேளாய் விதித்திடும் வாதந் தும்மல் மேவுநீர் மலங் கொட்டாவி

கதித்திடு பசிநீர் வேட்கை காசமோ டிளைப்பு நித்திரை மதித்திடு வாந்தி கண்ணீர் வளர்சுக்லஞ் சுவாசமாமே"

1. வாதம் 

2. தும்மல்

3. சிறுநீர்

4. மலம்

5. கொட்டாவி

6. பசி

7. நீர்வேட்கை

8. காசம்

9. இளைப்பு

10. நித்திரை

11. வாந்தி

12. கண்ணீர்

13. சுக்கிலம்

14. சுவாசம்

 இயற்கை வேகங்களை தடுக்கலாகாது !!

நமது உடலில் ஏற்படும் அறிகுறிகளான ?  உடலில் இருந்து வெளியாகும் அபானவாயு ! ( கீழ்நோக்கி பிரியும்) மலம் ! சிறுநீர் ! தும்மல் ! நீர்வேட்கை ! பசி ! தூக்கம் ! சுக்கிலம்(விந்து) ! இவைகளின் வேகத்தை தடுக்கலாகாது !! 

இவைகளை தடுப்பதால் மிக தீவிரமான நோய்கள் உருவாகக் கூடும் !!

குறிப்பாக வாதம் சீற்றமடைவதால் ? வரும் நோய்கள் நம்மை தாக்கும் !!

ஆகையால் மேலே குறிப்பிட்ட தன்மைகள் ! உடல் ஆரோக்கியத்திற்கான சொல்லும் மொழிகள் ! தயவு கூர்ந்து புறந் தள்ளாமல் கவனியுங்கள் ! நலம் பெறுங்கள்

 

Tags :

Share via