உலகக் கோப்பை; பார்வையாளர் விசாக்களை நிறுத்திய கத்தார்

by Staff / 22-09-2022 11:02:31am
உலகக் கோப்பை; பார்வையாளர் விசாக்களை நிறுத்திய கத்தார்

உலகக் கோப்பையின் போது கத்தாருக்கு வருகை தரும் பார்வையாளர் விசாவிற்கு தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.நவம்பர் 1 முதல் டிசம்பர் 23 வரை பார்வையாளர் விசாக்கள் வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உலகக் கோப்பையின் போது, ​​ஹயாகார்டு மூலம் ரசிகர்கள் கத்தாருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். சுமார் 15 லட்சம் கால்பந்து ரசிகர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23க்கு பிறகு இயல்பு நிலை திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via