ரூ.17 கோடிபணப்பரிமாற்ற  வழக்கில் சிவசேனா பெண் எம்.பி. கைது

by Editor / 28-09-2021 03:42:55pm
ரூ.17 கோடிபணப்பரிமாற்ற  வழக்கில் சிவசேனா பெண் எம்.பி. கைது


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், சிவசேனா எம்பி பாவனா கவாலியை இன்று அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
அதோடு அவரது உதவியாளர் சயீத் கானையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. எம்.பி பாவனாவுக்கு சொந்தமான அறக்கட்டளையில் ரூ.17 கோடி பணபரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.பாவனா கவாலி மகாராஷ்டிராவின் யவத்மல் வாஷிம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். எம்பி பாவனா கவாலியுடன் தொடர்புடைய அறக்கட்டளையில், சுமார் 17 கோடி ரூபாய் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


'பாலாஜி சஹ்கரி போர்டு என்ற நிறுவனத்தின் மூலம், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (என்சிடிசி )ரூ.43.35 கோடி கடன் பெற்று, பாவனா கவாலி ஏமாற்றியதாக ஹரீஷ் சர்தா என்ற சமூக சேவகர் அண்மையில் குற்றம் சாட்டினார். மேலும், என்சிடிசியிடம் பத்து ஆண்டுகளுக்கு கடன் வாங்கி உண்மையில் நிறுவனமே தொடங்கப்படவில்லை என்றும் பாவனா கவாலி மீது குற்றம் சாட்டியுள்ளார்.


பாவனா கவாலியின் நிறுவனமான, பாவனா அக்ரோ புரொடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் தொடர்பாகவும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திற்காக, அவர் இரண்டு வங்கிகளில் இருந்து ரூ.7.5 கோடி கடன் வாங்கியதாகவும், நிறுவனம் பின்னர் அவரது தனிப்பட்ட செயலாளருக்கு ரூ.7.09 கோடிக்கு விற்று விட்டதாகவும் கூறப்படும் நிலையில், சிவசேனா எம்.பி பாவனா கவாலியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

 

Tags :

Share via