முதல்வர் அறிவித்தது வெறும்  சாதாரண அறிவிப்புகள்.எடப்பாடி பழனிசாமி

by Editor / 28-09-2021 03:40:56pm
முதல்வர் அறிவித்தது வெறும்  சாதாரண அறிவிப்புகள்.எடப்பாடி பழனிசாமி


புதிதாக எந்த திட்டமும் கொண்டுவராமல், ஏற்கனவே அண்ணா தி.மு.க. அறிவித்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.


விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று 130 நாட்களில் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால் அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் வெறும் 3, 4 திட்டங்களைத்தான் நிறைவேற்றி யுள்ளார், மீதமுள்ள அறிவிப்புகள் வெறும் சாதாரண அறிவிப்புகள்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்ய திட்டங்களை கொண்டு வருவார்கள், இங்கிருக்கிற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமலும், இங்குள்ள ஏழை மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமலும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த ஜெயலலிதா பல்கலை க்கழகத்தை அண்ணாமலை பல்கலை க்கழகத்தோடு இணைத்துவிட்ட பெருமை அவரையே சாரும்.என்று பேசினார்.

 

Tags :

Share via