போராட்டம் ஒத்திவைப்பு - நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

by Staff / 04-05-2024 11:54:45am
போராட்டம் ஒத்திவைப்பு - நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப்பேரவைத் தலைவர்களையும் வீட்டிலேயே தடுப்புக்காவலில் வைத்து கொடும் அடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் இன்றைய ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அக்கட்சி தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உரிய அனுமதி பெற்று மாற்று தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். வள்ளலார் ஆய்வு மைய கட்டுமான பணிகளை நிறுத்த கோரி இன்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

 

Tags :

Share via