இந்திய பிரதமருக்கு நன்றி

by Admin / 13-03-2022 11:15:30am
இந்திய பிரதமருக்கு நன்றி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 18-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். 

போரை முன்னிட்டு பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியது.
 
இதற்கிடையே, ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து நேபாள நாட்டினர் 4 பேரை சொந்த நாடு திரும்ப இந்தியா உதவி செய்தது.

இந்நிலையில், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 4 நேபாள நாட்டினரை நாடு திரும்ப உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்தார்.

 

Tags :

Share via