5 மாநில தேர்தல்களுக்கு 340 கோடி செலவிட்ட பாஜக

by Staff / 22-09-2022 01:48:19pm
5 மாநில தேர்தல்களுக்கு 340 கோடி செலவிட்ட பாஜக

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பாஜக ரூ.340 கோடிகளுக்கு மேல் செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தேர்தல் செலவு அறிக்கையின்படி உத்தரபிரதேசத்தில் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இடங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் 194 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள செலவின அறிக்கையில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via